கடின உழைப்புக்கு பலனில்லாமல் போகாது; பயம் வேண்டாம் – ராகுல் காந்தி

0
345

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில்  அச்சப்பட வேண்டாம் என ராகுல் காந்தி  காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது. விழிப்புடன் இருங்கள். கண்காணியுங்கள் . ஆனால் அச்சப்படாதீர்கள். நீங்கள் உண்மைக்காக போராடுகிறீர்கள். கருத்துக் கணிப்பு முடிவுகளால் மனம் உடைந்துவிடாதீர்கள். காங்கிரஸ் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் கடின உழைப்புக்கு பலனில்லாமல் போகாது. ஜெய் ஹிந்த் என்று இந்தியில் பதிவிட்டுள்ளார். 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக 17 வது மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. மே 23 வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.  மக்களவைத் தேர்தல் கருத்து கணிப்புகள் பெரும்பாலனவை மீண்டும் மோடி ஆட்சியே அமையும் எனத் தெரிவித்திருக்கிறது . 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here