கடவுள்தான் இந்திய பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் – பாஜக எம்பிக்கு பதிலடி கொடுத்த ப.சிதம்பரம்

0
176

நாட்டின் பொருளாதாரத்துக்கும் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கும் தொடர்பு கிடையாது என்னும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கு ப சிதம்பரம் பதிலடிக் கொடுத்துள்ளார். 

நேற்று நாடாளுமன்றத்தில் வரிச் சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.  விவாதத்தில் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாகாந்த் துபே  நமது நாட்டுப் பொருளாதாரத்துக்கும் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கும் (ஜிடிபிக்கும்) எந்தவிதமான தொடர்பும் இல்லை.  ஆகவே  ஜிடிபி பற்றிப் பேசுபவர்கள்  நம்முடைய நாட்டுப் பொருளாதார வளர்ச்சியுடன் ஜிடிபியை தொடர்புப்படுத்திப் பேசுவதை நிறுத்த வேண்டும். உண்மையில்  ஜிடிபியைக் காட்டிலும் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம் ஆகும்.

கடந்த 1934 ஆம் ஆண்டு முதல் ஜிடிபி என்பது வந்தது.  ஜிடிபி என்பது அதற்கு முன்பு  இல்லை.  இது குறித்து  பொருளாதார வல்லுநர் குஸ்நெட் கூறுகையில், பைபிள், ராமாயணம், மகாபாரதம் போன்று ஜிடிபியை நம்பத்தேவையில்லை. ஏனெனில் எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் அளவுகோலாக ஜிடிபி இருக்காது என்றார்” எனத் தெரிவித்தார்

இது குறித்து முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எதும் சம்பந்தம் இல்லை, தனிப்பட்ட வரி குறைக்கப்படும், இறக்குமதி வரி அதிகரிக்கப்படும். இவை பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றிய பாஜகவின் கருத்துக்கள். இந்தியாவின் பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here