மனித முகச் சாயலில் ஒரு மீன் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த மீன் நீரில் நீந்தும்போது தற்செயலாக ஒரு பெண் அதைப் படம் பிடித்துள்ளார். 

இந்த மீனை சீனாவில் உள்ள மியாவோ கிராமத்தில் ஒரு பெண் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதனை மைக்ரோப்ளாக்கிங்வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் மீனின் முகம் மனிதச் சாயலில் தென்படுகிறது. இதை போன்ற உருவத்தில் மீன் உள்ளது வழக்கமானதல்ல என்று தெரிய வந்துள்ளது.

மொத்தம் 14 செகண்ட் மட்டுமே ஓடக்கூடிய வீடியோவில் தென்படும் மீனின் முகம் மனித முகத்தில் இருப்பதைக் கண்டு நெட்டிசன்கள் ஆச்சரியப் பதிவுகளைஇட்டு வருகின்றனர். குறிப்பாக அதன் முகம் மற்றும் வாய், கண்கள் மனித சாயலில் உள்ளன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here