கடன் வாங்கி கட்சி தொடங்கும் ரஜினி…?

0
449
Rajinikanth

தேர்தல் வரும்போது தனிக்கட்சி ஆரம்பித்து, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று அறிவித்தார் ரஜினி. இந்த ஒருவரி செய்திக்கு ஒருலட்சம் விளக்க உரைகள் எழுதப்பட்டுவிட்டன. இப்போது புதிதாக ஒன்று.

கட்சி தொடங்கினால் ரஜினிக்கு கொட்டிக் கொடுக்க தொழிலதிபர்கள் தயாராக இருக்கிறார்கள். எனினும் ஆரம்பகட்ட வேலைகளுக்கு தொழிலதிபர் ஒருவரிடம் ரஜினி வட்டிக்கு பணம் கேட்டிருப்பதாக செய்திகள் உலவுகின்றன. ரஜினியை குறித்து அறியாத அப்பாவிகள், இந்த செய்தியை ஆச்சரியமாக பகிர்ந்து வருகிறார்கள்.

ரஜினி பிஜேபியின் ‘பி’ டீம் என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதன் முதல் சேதாரம் பிஜேபிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் திராவிட கட்சிகளுக்கே என்பதும் பிஜேபிக்கு தெரியும். இந்த ஒரு காரணத்துக்காகவே அவருக்கு கொட்டிக் கொடுக்க பிஜேபி தயாராக உள்ளது. தொழிலதிபர்கள் கூட்டம் ஒன்றும் பணத்தை இறக்க தயார். இவ்வளவு வருமான வழிகள் இருக்கையில் கடன் வாங்கி ரஜினி கட்சி ஆரம்பிக்கிறார் என்பது எத்தனை வெகுளித்தனமான நம்பிக்கை.

சொந்த காசுக்கு சேதாரம் வராமல் பார்த்துக் கொள்கிறவர் கடன் வாங்கி கட்சி ஆரம்பிக்கிறாராம். அவ்ளோ நல்லவரா ரஜினி…?

இதையும் படியுங்கள்: ’கடைசி மூச்சு வரை அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிப்போம்: 2013இல் பாஜக கூறியது’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்