ஏர் இந்தியாவின் கடன் சுமையைக் குறைப்பதற்காக நிலம் கட்டடம் ஆகியவற்றை விற்று ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் 55ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் கடனில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் ஏர் இந்தியாவின் நிலம், கட்டடம் ஆகிய சொத்துக்களை விற்று ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. மும்பையில் உள்ள ஏர்லைன்ஸ் ஹவுஸ் கட்டடம், டெல்லியில் வசந்த்விகார், பாபா கரக்சிங் மார்க் ஆகிய இடங்களில் உள்ள நிலம் ஆகியவை இவற்றில் அடங்கும்.

ஏற்கெனவே ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டை விற்கக் கடந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here