பஞ்சாப் மாநில அரசு, விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தது. ஆனால் கடன் பெற்ற விவசாயிகளுக்கு வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி வருவது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் அம்ரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. போதிய மழையின்மை மற்றும் வறட்சி போன்ற காரணங்களால் விவசாயம் பொய்த்துப்போன நிலையில், வங்கிகளில் தாங்கள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அம்மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

Amarinder Singh

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. கடன்களைத் திருப்பிச் செலுத்த வலியுறுத்தி விவசாயிகளுக்கு வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி வருகின்றன. மேலும் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் புகைப்படத்தையும் காட்சிப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன.

farmers

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநில நிதியமைச்சர் மன்பிரீத்சிங் பாதல், ரிசர்வ வங்கியின் அதிகாரிகள் மற்றும் மற்ற வங்கி அதிகாரிகளைச் சந்தித்து, விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் விவசாயிகளுக்கு வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி வருகின்றன.

rbi

ஆனால் வங்கிக் கிளை அதிகாரிகள், தங்களுக்கு முறையான அறிவிப்பு தலைமை அலுவலகத்திலிருந்தோ அல்லது ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்தோ எதுவும் வரவில்லை எனக் கூறுகின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ஆக.22ஆம் தேதி பர்னாலாவில் மிகப்பெரிய பேரணியொன்றை நடத்த முடிவு செய்துள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களில் பஞ்சாப் மாநிலத்தில் 160 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: ரேஷன் கார்டு கட்டுப்பாடுகள்: “ஏழை, எளிய மக்களுக்கு இல்லையா இந்தத் தேசம்?”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்