கடந்த 5 வருடங்களில் எதிர்த்ததைவிட 10 மடங்கு அதிக பலத்துடன் ஆர்எஸ்எஸ் , பாஜகவை எதிர்ப்பேன் – ராகுல் காந்தி

"I am with the poor, farmers and labourers. This fight (against BJP and RSS) will continue," he said.

0
323

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு பல அழுத்தங்கள் கொடுக்கப்படுகிறது, தாக்குதலுக்கு ஆளாகின்றனர், சில நேரங்களில் கொலையும் செய்யப்படுகின்றனர் என்றார்.

இதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் தெரிவித்திருந்தார். 

கடந்த 2017-ஆம் ஆண்டு பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், கொலையை பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுடன் இணைத்து பேசியதாக ராகுல் மீது ஆர்எஸ்எஸ் நிர்வாகி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்காக ராகுல் காந்தி இன்று வியாழக்கிழமை  மும்பை  பெருநகர நீதிமன்றத்தில் ஆஜரானார். 

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் ரூ.15 ஆயிரம் உத்தரவாதத்தில்  காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி நான் எப்போதும் ஏழைகளுடனும், விவசாயிகளுடனும், தான் நிற்பேன். கடந்த 5 வருடங்களில் எதிர்த்ததைவிட 10 மடங்கு அதிக பலத்துடன் ஆர் எஸ் எஸ் , பாஜகவை எதிர்ப்பேன் என்று கூறினார். அவர்களைத் தொடர்ந்து எதிர்ப்பேன். என்னைத் தொடர்ந்து தாக்கி வருகிறார்கள் அதை நான் ரசிக்கிறேன் என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here