கடந்த 1 வருடமாகவே பேட்டிக்கு மறுநாள் விளக்கம் கொடுக்கும் ரஜினி; ஒரு மணி நேரத்தில் 2 பேட்டிகள்; யாரைப் பார்த்து பயப்படுகிறார்?

0
448

சரியாக 1 மணி நேர இடைவெளியில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு பேட்டி அளித்து இருக்கிறார். அவரின் இந்த இரண்டு பேட்டிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை கூர்ந்து கவனித்தால் தெரிந்து கொள்ள முடியும்.

கே. பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற பிறகு, தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ரஜினிகாந்த்திடம், பாஜக தலைவராக நீங்கள் வரவுள்ளீர்கள் என செய்திகள் வெளியாகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்டது போல எனக்கும் காவி சாயம் பூச முயற்சிகள் நடக்கிறது ஆனால் நான் சிக்க மாட்டேன் என்று அழுத்தமாக சொன்னார்.  அவ்வாறு  கூறியவர் அவரது ஸ்டைலில் வாய் விட்டுச் சிரித்தார்.

பாஜகவில் இணைவது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் தொடர்ந்து உங்களிடம் பேசி வருவதாகக் கூறப்படும் செய்திகள் குறித்த கேள்விக்கு, பாஜகவில் இருந்து யாரும் என்னை அழைக்கவில்லை. யாரும் என்னை சந்திக்கவில்லை. பாஜகவின் நிறமான காவியை எனக்கு பூச முயற்சி நடைபெறுகிறது. ஆனால் நான் சிக்கமாட்டேன். எனக்கு ஒரு போதும் காவிச் சாயம் பூச முடியாது என்று தெளிவாகக் கூறினார். இவ்வாறு ரஜினி பேசியது பாஜக தலைவர்களுக்கே அதிர்ச்சியாக இருந்திருக்கும் . 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சில நிமிடங்களில், மீண்டும் தனது வீட்டு வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ’திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த விவகாரத்தை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்தி விட்டன. எனக்கு பாஜக சாயம் பூசப்பார்க்கிறார்கள். ஆனால் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றும் கூறினார். நான் எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவன்.  நான் பாஜகவில் சேரப்போவதாக வரும் தகவல் பற்றி கேட்கிறீர்கள். அவர்கள் சொல்வார்கள். முடிவெடுக்க வேண்டியது நான்தான். அதற்காக, அவர்கள் என்னை நம்பிதான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

தொடர்ந்து நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன்.

தமிழகத்தில் இன்னும் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது. அயோத்தி வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதிகாக்க வேண்டும். மிசாவில் ஸ்டாலின் கைது பற்றி கேட்கிறீர்கள். அதுபற்றி எனக்குத் தெரியாது. தெரியாதது பற்றி கருத்துச் சொல்ல முடியாது’’ என்றார். 

மேலும் ஒரு கருத்தை பதிவு செய்தார், அதாவது, தமிழகத்தில் சரியான ஆளுமையான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது என்று கூறினார்.

இந்த ஒரு மணி நேர இடை வெளியில் என்ன நடந்திருக்கும் என்று ரஜினிக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்குமே வெளிச்சம் . ஆனால் பாஜகவினரைப் பார்த்து பயப்படுவது போல்தான் தெரிகிறது அவர் இரண்டாவதாக கொடுத்தப் பேட்டி.  

  முதல் பேட்டியில் பாஜகவை எதிர்த்துவிட்டு, இரண்டாவது பேட்டியில் பாஜகவிற்கு ஆதரவாக பேசுவது போல ரஜினிகாந்த் பேசினார். பெரிதாக பாஜகவை அவர் இரண்டாவது முறை சீண்டவில்லை. முதல் பேட்டியை சமாளிக்கும் விதமாக அவரது இரண்டாவது பேட்டி இருந்தது.

இப்படி முதலில் பாஜகவிற்கு எதிராக பேசுவது போல பேசிவிட்டு, மறுநாளே பாஜகவிற்கு ஆதரவாக பேசுவது எல்லாம் ரஜினிகாந்த் வழக்கமாக செய்வதுதான். தற்போதும்  அதேபோல்தான் அவர் பேட்டி அளித்து இருக்கிறார்.

ரஜினி எப்போது பேசிவிட்டும் மறுநாள் விளக்கம் அளிப்பார். அவ்வாறு பேசும் போது   முரண் இருக்கும் . ரஜினி எப்போதுமே பாஜகவுக்கு ஆதரவாகவே பேசுவார். 

தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக திரளும் மிகப்பெரிய கூட்டணி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரஜினி, “10 பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்த்து போராடுறாங்கனா யார் பலசாலி?’ என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார்.

அப்போ, ‘நரேந்திர மோடி பலசாலி என்று சொல்கிறீர்களா?’ என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, ‘இதைவிட க்ளீயரா யாரும் பதில் சொல்ல முடியாது’ என்றார்.

காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது குறித்து கேட்கபட்டபோது 

“காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” என்றார்.

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய போது, “நாடாளுமன்றத்தில் நீங்கள் (அமித் ஷா) காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆற்றிய உரை, அற்புதம். இப்போது அனைவருக்கும் அமித் ஷா யாரென்று தெரிந்திருக்கும். அதில் எனக்கு மகிழ்ச்சியே,” என்றார்.

இந்தி திணிப்பு பற்றி கேட்ட போது இந்தி திணிப்பு வேண்டாம். ஆனால், பொதுமொழி ஒன்று இருப்பது நல்லதென நடிகர் ரஜினிகாந்த் கூறி இருந்தார்.

அவர், “தமிழ்நாடு மட்டுமல்ல, எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் முன்னேற்றத்துக்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிருஷ்டவசமாக நம் நாட்டுக்கு பொது மொழி ஒன்று கொண்டு வரமுடியாது,” என்று கூறி இருந்தார்.

 ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி  

 ரஜினிகாந்த் இரண்டாவதாக அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் வெற்றிடம் இருக்கிறது என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்து பேசியிருக்கும் துரைமுருகன்   தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பல நாட்கள் ஆகிவிட்டன என துரைமுருகன் கூறியுள்ளார்.

அரசியலில் இருந்திருந்தால் ஸ்டாலின் வெற்றிடத்தை நிரப்பியது தெரிந்திருக்கும் என ரஜினிகாந்திற்கு துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். 

 திமுக பொருளாளர் துரைமுருகன் இதுகுறித்து கூறும்போது, வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம்; தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பல நாட்கள் ஆகிவிட்டன. 

தமிழகத்தின் தட்பவெப்ப அரசியல் குறித்து ரஜினிக்கு தெரியவில்லை. ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதை உணர்வார் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here