கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடிவடையவில்லை. எனவே, புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு டிச.26 வரையும், தஞ்சை மாவட்டத்திற்கு டிச.31 வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
gaja cyclone eb work.001
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர் கோட்டங்களில் டிச.26 வரை மின்கட்டணம் செலுத்தலாம். தஞ்சை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஒரத்தநாடு கோட்டங்களில் டிச.31வரை மின்கட்டணம் செலுத்தலாம். 

நாகையில் 14 பிரிவுகளில் உள்ள நுகர்வோர் டிச.26 வரை அபராதமின்றி மின்கட்டணம் செலுத்தலாம். திருவாரூர் கோட்டங்களிலும், புதுக்கோட்டையின் அனைத்து கோட்டங்களிலும் டிச.26 வரை மின்கட்டணம் செலுத்தலாம்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நலன் கருதி 3வது முறையாக அவகாசத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நீட்டித்துள்ளது.

தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மட்டும் அவகாசம் பொருந்தும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here