புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 10 ஏக்கர் அளவில் தென்னை மற்றும் தேக்கு மரங்கள் புயலால் நாசமானதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த விவசாயி திருச்செல்வம், 10 ஏக்கர் அளவில் தென்னை மற்றும் தேக்கு மரங்களை சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் கஜா புயலால் விவசாயி திருசெல்வத்தின் தோப்பில் தென்னை மரங்களும் தேக்கு மரங்களும் அடியோடு முறிந்து விழுந்தன.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த விவசாயி திருச்செல்வம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விவசாயி திருச்செல்வம் உயிரிழந்தார்.

புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தற்கொலை போன்ற முடிவுகளில் ஈடுபட வேண்டாம் என்று விவசாய அமைப்புகள் ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.