கச்சா எண்ணெய்‌ கொள்முதல்‌ விஷயத்தில்‌ இந்தியாவின்‌ கொள்கையை உலக நாடுகள்‌ புரிந்து கொண்டுவிட்டன என்று வெளியுறவுச்‌ செயலர்‌ வினய்‌ மோகன்‌ குவாத்ரா தெரிவித்தார்‌.

ரஷியா-உக்ரைன்‌ போருக்குப்‌ பிறகு ரஷஹியாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும்‌ கச்சா எண்ணெயின்‌ அளவு 50 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டின்‌ மொத்த இறக்குமதியில்‌ ரஷிய எண்ணெய்‌ 10 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க ஆதரவு நாடுகள்‌ ரஷியாவிடம்‌ இருந்து கச்சா எண்ணெய்‌ கொள்முதல்‌ செய்வதைத்‌ தவிர்த்ததால்‌, இந்தியாவுக்கு ரஷியா சலுகை விலையில்‌ எண்ணெய்‌ வழங்கி வருகிறது. அமெரிக்கா மற்றும்‌ ஐரோப்பிய நாடுகளின்‌ எதிர்ப்பைப்‌ பொருட்படுத்தாமல்‌ ரஷியாவில்‌ இருந்து இந்தியா எண்ணெயை அதிகம்‌ வாங்கி வருகிறது.

India picks Vinay Mohan Kwatra as its new ambassador to Nepal

இந்நிலையில்‌, வெளியுறவுச்‌ செயலர்‌ வினய்‌ மோகன்‌ குவாத்ரா டெல்லியில்‌ (ஜூன்-24) நேற்று  செய்தியாளர்களைச்‌ சந்தித்தார்‌. அப்போது அடுத்த ஜி7 மாநாட்டில்‌ பங்கேற்க ஜெர்மனி செல்லும்‌ பிரதமர்‌ நரேந்திர மோடியிடம்‌ உலகத்‌ தலைவர்கள்‌ ரஷிய கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல்‌ செய்வது தொடர்பாகத்‌ தங்கள்‌ அதிருப்தியைத்‌ தெரிவிக்க மாட்டார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “இந்தியாவின்‌ கச்சா எண்ணெய்‌ கொள்முதல்‌ மற்றும்‌ அது தொடர்பான வர்த்தக ஒப்பந்தங்கள்‌ ஆகியவை முழுவதும்‌ நாட்டின்‌ எண்ணெய்‌ தேவை மற்றும்‌ எரிபொருள்‌ பாதுகாப்பு தொடர்பானது. இந்த விஷயத்தில்‌ இந்தியாவின்‌ கொள்கையை உலக நாடுகள்‌ புரிந்து கொண்டுவிட்டன. எனவே, அதில்‌ எந்தப்‌
பிரச்னையும்‌ ஏற்படாது. ஜி7 மாநாட்டில்‌ இந்தியா தொடர்ந்து பங்கேற்று வருகிறது. இதன்‌ மூலம்‌ சர்வதேச அளவில்‌ எழும்‌ பிரச்னைகளுக்குத்‌ தீர்வுகாண இந்தியா உதவி வருகிறது’ என்றார்‌.

ஜி7 நாடுகள்‌ உச்சிமாநாட்டில்‌ பங்கேற்பதற்காக பிரதமர்‌ நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன்‌ 26) ஜெர்மனிக்குப்‌ பயணம்‌ மேற்கொள்ள இருக்கிறார்‌.

ஜெர்மனி பிரதமர்‌ ஒலாஃப்‌ ஷோல்ஸ்‌ அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில்‌ பங்கேற்பதற்காக மோடி அந்நாட்டுக்குச்‌ செல்கிறார்‌. இப்போது ஜி7 அமைப்புக்கு ஜெர்மனி தலைமை வகிக்கிறது. இதில்‌ அமெரிக்கா, பிரிட்டன்‌, கனடா, பிரான்ஸ்‌, இத்தாலி, ஜப்பான்‌ ஆகிய இதர நாடுகள்‌ உறுப்பினர்களாக உள்ளன. அமெரிக்க அதிபர்‌ ஜோ பைடன்‌ உள்பட அனைத்து உறுப்பு நாடுகளின்‌ தலைவர்களும்‌
இக்கூட்டத்தில்‌ பங்கேற்கின்றனர்‌. எனவே, பிரதமர்‌ மோடி இக்கூட்டத்தில்‌ பங்கேற்பது கூடுதல்‌ முக்கியத்துவம்‌ பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here