சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஜி.டி அகர்வால் கடந்த ஜூன் 22ம் தேதியிலிருந்து அரசாங்கம் கங்கையை தூய்மைப்படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய 87வது வயதில் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (வியாழக்கிழமை)அவரது உயிர் பிரிந்தது.

அனைவராலும் அறியப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஜி.டி அகர்வால் மாரடைப்பால் உயிரிழந்தார். 109 நாள் உண்ணாவிரதத்திற்கு பிறகு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தூய்மை கங்கை தன்னார்வலர் ஜி.டி அகர்வால் உண்ணாவிரதம் இருந்த சமயத்தில் நீரில், தேன் கலந்து மட்டும் அருந்தி வந்ததாக தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக அதையும் கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

ஜி.டி.அகர்வால், ஜி.டி அகர்வால் கான்பூர் ஐஐடியில் பேராசியராக பணியாற்றியவர் . மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலும் பணியாற்றியவர். இவர், தனது பெயரை பின்னாளில் சுவாமி ஞானசொரூப் சானந்த் என்று மாற்றிக் கொண்டார்.
கங்கை நதியின் கிளை நதிகளில் நீர்மின் திட்டங்களை தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஜி.டி.அகர்வால், நதிகளைப் பாதுகாப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
கங்கை நதியை பாதுகாக்க வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்த இவர், இதற்கு முன்பும் சில முறை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தனது டிவிட்டர் பக்கத்தில், சூற்றுச்சூழல் ஆய்வாளர்களுக்கு முன்னோடியான ஜி.டி அகர்வால் கடந்த 109 நாட்களாக கங்கையை அரசாங்கம் தூய்மைபடுத்த வேண்டுமென்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரை செவ்வாய்க்கிழமை உத்திரகாண்ட் போலீசார் வற்புறுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மோடியின் செவிட்டு காதில் கங்கையை தூய்மைப்படுத்த இவர் வைத்த கோரிக்கை விழுந்த பின் இன்று உயிரிழந்துள்ளார். நல்ல ஆன்மாக்களுக்கு இவ்வுலகில் இடமில்லை என்று பதிவிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here