ஓ பேபி… சந்தோஷ மூடில் சமந்தா ரசிகர்கள்

0
158

சென்ற வருடத்தைப் போல தனது ரசிகர்களை மகிழ்ச்சி மோடில் தொடர்ந்து வைக்கப் போகிறார் சமந்தா.

சென்ற வருடம் சமந்தா நடிப்பில் வெளியான நடிகையர் திலகம், இரும்புத்திரை, யு டர்ன் ஆகிய மூன்று படங்களும் அவற்றின் தெலுங்குப் பதிப்புகளும் தொடர்ந்து ஹிட்டாகின. அதற்குமுன் ரங்கஸ்தலம் என்ற மெகா ஹிட். 

இந்த வருடமும் அதேபோல் சமந்தா நடித்த படங்கள் தொடர்ந்து வெளியாகின்றன. அனைத்தும் எதிர்பார்ப்புக்குரிய படங்கள்.

முதலாவதாக சூப்பர் டீலக்ஸ். மார்ச் 29 இப்படம் வெளியாகிறது. தொடர்ந்து ஏப்ரல் 5 கணவர் நாக சைதன்யாவுடன் சமந்தா நடித்த தெலுங்குப் படம் மஜிலி வெளியாகிறது. அதையடுத்து இன்னொரு தெலுங்குப் படமான ஓ பேபி வெளியாகிறது. 

சென்ற வருடம் 5 ஹிட் படங்களை சமந்தா கொடுத்தார். இந்த வருடம் அது தொடரும் என்பதை இந்தப் படங்களின் வரிசை காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here