துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ள கருத்தை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற வர்த்தக உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த இடமாக தமிழகம் திகழ்வதாகவும், அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் மூன்றாவது பெரிய மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் முதலீடு செய்யவும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஓ.பன்னீர் செல்வத்தின் பேச்சை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”ஆசியாவிலேயே முதலீடு செய்ய சிறந்த இடம் தமிழ்நாடு தான்: ஓ.பன்னீர்செல்வம் – அப்புறம் ஏன் உங்கள் ஊழல் சொத்துகளை கேரளத்தில் முதலீடு செய்திருக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

ramadoss

இதையும் படியுங்கள்: உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்