ஓ அஞ்சலி… ஓ ஜெய்… உருகிய காதல் நெஞ்சங்கள்

0
374
Anjali & Jai

ஜெய்யும், அஞ்சலியும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி சம்பந்தப்பட்ட இருவரின் ஒப்புதலுக்காக பல வருடங்களாக காத்திருக்கிறது. ஜெய் அஞ்சலிக்கு வீட்டில் தோசை சுட்டு பரிமாறுகிறார். அஞ்சலி ஜெய்க்கு ஸ்பெஷலாக பர்த் டே கேக் வரவழைத்து ஊட்டுகிறார். அருகில் இருந்து கொண்டே ட்விட்டரில் ஓ ஜெய்.. ஓ அஞ்சலி.. என்று பரஸ்பரம் கொஞ்சிக் கொள்கிறார்கள். காதலுக்கான ஆறு அம்சங்களும் அமர்க்களமாக பொருந்துகிறது. ஆனால், வாய்விட்டு, ஆமாம் நாங்க காதலிக்கிறேnம் என்று மட்டும் சொல்ல மறுக்கிறார்கள். ஒருவேளை நாளை மனம் மாறினால் என்னாகும் என்ற எச்சரிக்கையா?

நேற்று அஞ்சலியின் பிறந்தநாள். ட்விட்டரில் அவருக்கு ஜெய் வாழ்த்து தெரிவித்தார். எப்படி?

“எனக்கு நீ எவ்வளவு சிறப்போ அதேபோன்று இந்த நாள் உனக்கு சிறப்பாக அமையட்டும். என் ஒவ்வொரு நாளையும் நீ நீயாக இருந்து சிறப்பாக்குகிறாய் என்பதை உனக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நானும், கடவுளும் என்றுமே உன்னோடு இருப்போம். பிறந்தநாள் வாழ்த்துகள்.”

காதலன் காதலியின் நெருக்கமும், கணவன் மனைவியின் கரிசனமும் ஜெய்யின் ட்வீட்டில் பீறிடுகிறது. ஜெய்யின் வாழ்த்துக்கு அஞ்சலி பதிலளித்துள்ளார்.

“நீ என்னோடு இருப்பதற்கு நன்றி, அது தொடர வேண்டும். இந்த நாளில் இப்படியொரு ஸ்பெஷல் வாழ்த்து சொல்லியதற்கும் நன்றி.”

ட்விட்டரிலும், நேரிலும் பரஸ்பரம் கொஞ்சிக் கொள்ளும் இவர்களிடம் ஒரு வேண்டுகோள். நீங்க காதலிக்கலைன்னு சொன்னாலும் பரவாயில்லை. நட்பாதான் பழகினோம்னு மட்டும் சொல்லிடாதீங்க… கேட்கிறவங்க காது தாங்காது.

இதையும் படியுங்கள் : செல்போன் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? இதைப் பாருங்கள்

இதையும் படியுங்கள் : “வல்லரசா..? முதல்ல நல்லரசு அமையட்டும்” – மோடி அரசுக்கு விஜய் குட்டு

இதையும் படியுங்கள் : NDTV இல் CBI சோதனை: சுதந்திரமான ஊடகங்கள் சாத்தியமா?

இதையும் படியுங்கள் : மதுரை: பாலில் சோப்பு ஆயில் கலப்படம்; பொதுமக்கள் அதிர்ச்சி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்