OPPO R17

ஓப்போ நிறுவனம் தனது ஓப்போ(Oppo) R17 ஸ்மார்ட்ஃபோனின் விலை மற்றும் இதர விபரங்களை வெளியிட்டுள்ளது. மேலும் இதனது மேம்பட்ட மாடலான Oppo 17 Pro -வும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறி கேமராக்கள், டிஸ்பிளேவுடன் கூடிய கைரேகை உணரி (fingerprint sensor) ஆகியவற்றை R17 மாடல் கொண்டுள்ளது. பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளது இதன் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. ஹூவே P20 Pro போனில் உள்ளதை ஒத்ததாக இது அமைந்திருக்கிறது. சூப்பர் VOOC ஃப்ளாஷ் சார்ஜிங் வசதி, எட்டு ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 710 பிராசசர், திரையின் மேல்நடுப்பகுதியில் சிறிய வெட்டு வடிவம் (display notch) ஆகியவை இதன் பிற சிறப்பம்சங்களாகும்.

OPPO R17PRO

Oppo R17 Pro திறன் குறிப்பீட்டு விவரங்கள்:

ஆண்டிராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட கலர் இயங்குதளம் (ColorOS 5.2), டூயல் சிம் (நானோ), 6.4” (1080*2340 பிக்சல்கள்) முழு எச்டி டிஸ்பிளே, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 SoC, 8ஜிபி ரேம்மும் கொண்டுள்ளது. பின்புறம் மூன்று கேமராக்கள் (12mp f/1.5-2.4, 20 mp f/2.6, TOF 3D ஸ்டீரியோ கேமரா). இதில் இதுவரை மூன்றாவதான 3டி ஸ்டீரியோ கேமராவின் சிறப்புப் பயன்பாடு என்ன என்று அறிவிக்கப்படவில்லை.

128ஜிபி இன்டர்னல் மெமரி உள்ளது. கனெக்டிவிட்டியைப் பொருத்தளவில் 4ஜி VoLTE, வைஃபை, ப்ளூடூத் 5.0, GPS/ A-GPS, USB டைப்-C, NFC சப்போர்ட். accelerometer, proximityஆகிய சென்சார்களைக் கொண்டுள்ளது. திரையுடன் கூடிய கைரேகை சென்சாரும் (fingerprint sensor) உள்ளது.

ஓப்போ நிறுவனத்தின் Super VOOC தொழில்நுட்பத்துடன் கூடிய 3,700mAh பேட்டரியும் கொண்டுள்ள Oppo R17 Proவின் எடை 183கிராம்கள்.

விலை விபரம் :

8ஜிபி ரேம்/128ஜிபி மெமரி உடைய ஓப்போ R17-இன் விலை இந்திய மதிப்பில் 35,600 ரூபாய். இதிலேயே 6ஜிபி ரேம்/128 ஜிபி மெமரியுடன் வெளியாகும் போனின் விலை இந்திய மதிப்பில் 32,600 ரூபாயாக இருக்கும். ஒப்போவின் அதிகார்வபூர்வ இணையதளத்தில் இப்போனை முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆகஸ்ட் 30 முதல் இதன் விற்பனை தொடங்கும்.

முன்பே அறிவிக்கப்பட்ட Neon Purple, Streamer Blue நிறங்கள் போக ‘Fog gradient’ என்று புதிதாக மற்றொரு நிறத்திலும் இப்போன் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 36,600 ரூபாய் ஆகும்.

ஓப்போ R17 Pro ஸ்மார்ட்ஃபோனின் விலை இந்திய மதிப்பில் 43,800 ரூபாயாக இருக்கலாம். அக்டோபர் மத்தியில் இதன் விற்பனை தொடங்கும்.
‘Fog gradient என்னும் புதிய நிறத்தில் இப்போன் வெளியாக உள்ளது. இத்திறன்பேசி இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here