ஓப்போ நிறுவனம், தனது அடுத்த ஸ்மார்ட்போனான ஓப்போ A9x-ஐ சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்ற மாதம் வெளியான ஓப்போ A9-விட சிறிது மெம்பட்ட மாடலாக இந்த ஓப்போ A9x உள்ளது.

ஓப்போ A9x ஸ்மார்ட்போன் வாட்டர் ட்ராப்(Waterdrop) நாட்ச், இரண்டு பின்புற கேமரா, பின்புறம் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் ஆகிய அமைப்புக் கொண்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் பை(AndroidPie) இயங்குதளத்தில் இயங்குகிறது. ஓப்போ A9x மீடியாடெக் ஹீலியோ P70 ஆக்டா-கோர் ப்ராசஸர் மூலம் செயல்படுகிறது. 6.5இன்ச் FHD+ திரை, 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டு பின்புற கேமராக்களையும், 16 மெகாபிக்சல் முன்புற கேமராவை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 4,020mAh பேட்டரி, 4G வசதி ஆகியவற்றையும்கொண்டுள்ளது.

சீனாவில் இந்த ஓப்போ A9x, 1,999 சீன யுவான்கள்(ரூ.20,200) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை(Ice Jade White) மற்றும் கருப்பு(Meteorite Black) ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கும். மே 21ஆம் தேதி அன்று ஓப்போ A9x விற்பனைக்கு வருகிறது.  இந்த ஸ்மார்ட்போனை, நீங்கள் தற்பொழுதே, ஓப்போ இ-ஷாப்களில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here