ஓப்போ ஏ7 எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4,230 mAhபேட்டரியைக் கொண்டுள்ளது. போனின் பின்புறத்தில் டூயல் கேமிரா உள்ளது. கிரேடியண்ட் கலர் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது. ஏஐ செல்ஃபி கேமிரா உள்ளது. ஓப்போ ஏ7னில் 3.5mm ஆடியோ ஜாக், யுஎஸ்பி ஓடிஜி சப்போர்ட், அதன் கலர்OS 5.2 ஸ்கின்னில் இயங்குகிறது. சீனாவில் நவம்.22 ஆம் தேதி முதல் விற்பனையை தொடங்குகிறது.

ஓப்போ ஏ7-ன் விலை

ஓப்போ ஏ7 ஸ்மார்ட்போன் சீனா மற்றும் நேபாளத்தில் அறிமுகமாகியுள்ளது. 4ஜிபி ரேம்/ 64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் சீன விலை CNY 1,599(ரூ. 16,500). ஆம்பர் கோல்ட், லைட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.
நேபாளில் தற்போது கிடைக்கும் 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் விலை NPR 35,790(ரூ.22,000). நேபாளில் இந்த போன் இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. கோல்ட் மற்றும் கிளேஸ் புளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

ஓப்போ ஏ7ன் சிறப்பம்சங்கள்,

ஓப்போ ஏ7 கலர் OS 5.2ல் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் 6.2 இன்ச் ஹெச்.டி+ ஐபிஎஸ் பேனல் உடன் 19:9 என்ற வீதத்தில் திரையைக் கொண்டுள்ளது. வாட்டர் டிராப் நாட்ச் உள்ளது. ஆக்டோ-கோர் குவால்கம் ஸ்நாப்டிராகன் 450 SoC உடன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 3ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. ஓப்போ ஏ7ல் 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமிரா சென்சார் உள்ளது. டூயல் கேமிரா உள்ளது. 13 மெகா பிக்சல் பிரைமை சென்சார் மற்றும் 2மெகா பிக்சல் செகண்டரி சென்சார் உள்ளது.
[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here