ஓப்போ நிறுவனம் தனது புதிய ஓப்போ கே1 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியிடுகிறது. சீனாவில் கடந்த ஆக்டோபர் மாதம் இந்த ஸ்மார்ட்போன் வெளியானது குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்டில் ஸ்பெஷ்லாக வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனுக்காக தனியாக டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம், குவால்கோம் ஸ்னாப்டிராகன் 660 மற்றும் இன்-டிஸ்பிளே கைவிரல் ரேகை பதிவு, 25 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா என பல அப்டேட்டுகளுடன் வருகிறது.

மேலும் 20,000 ரூபாய் பட்ஜெட்போன்களுக்கு போட்டியாக இது வெளியாகியுள்ளது. இந்த போன் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளது.

ஓப்போ கே1 சிறப்பு அம்சங்கள்:

அண்டிராய்டு 8.1, இந்த ஸ்மார்ட்போன் 6.4 இஞ்ச் ஃபுல் எச்டீ ஸ்கீரின் கொண்டது. சுமார் 91% ஸ்கீரணுக்கே அதன் நீளத்தை ஓதிக்கியுள்ளது. மேலும் ஆக்டா கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 660யில் இயங்கும் ஓப்போ கே1, 4 மற்றும் 6 ஜிபி ரேம் வெரியண்ட்களில் வருகிறது.

தெளிவான வீடியோ கால்களுக்கான 25 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா ஏற்கனவே இருக்கிற நிலையில் 16 மெகா பிக்சல் பின்பக்க கேமராவுடன் இந்த ஸ்மார்போன் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது. 64 ஜிபி மெமரி கொண்ட இந்த ஸ்மார்போனுக்கு 3,600mAh வரை பேட்டரியும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விலைப் பட்டியலை இன்னும் வெளியாடத நிலையில், 4ஜிபி ரேம் ரூ.16,900 க்கும், 6ஜிபி ரேம் ரூ.19,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மோச்சா ரெட் மற்றும் வான் கோக் புளூ ஆகிய நிறங்களில் கிடைக்கும். இந்தியாவில் அடுத்த வாரம் பிளிப்கார்டின் மூலமே வெளியிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here