முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் நல்ல நடிகர்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோஹித்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த், சனிக்கிழமை (இன்று) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அளுநரிடம் புகார் மனுவொன்றையும் கொடுத்தார்.

vijaya

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், சிவாஜி கமல் திரையில் நன்றாக நடிப்பது போன்று எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் நேரில் நன்றாக நடிக்கிறார்கள் என்றார். ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்த பின்னர் ஆட்சி மிக மோசமாக நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினார். வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணியில்லை என்றும், ஆளுநரின் செயல்பாட்டைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். டெங்கு காய்ச்சல் பிரச்சினை, சட்டம்- ஒழுங்குப் பிரச்னை குறித்து ஆளுநரிடம் முறையிட்டதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்