தானொரு ஓபனிங் கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் அஜித்.

அடைத்துக்கிடக்கும் டாஸ்மாக்கில் காலை 11.59வரை ஈ, காக்கா இருக்காது. 12 மணிக்கு ஷட்டர் உயர்த்தியதும் எங்கிருந்து வருவார்கள் என்று தெரியாது, கூட்டம் முண்டியடிக்கும். அதுபோலத்தான் அஜித் ரசிகர்கள். அஜித்தின் படம் இல்லாத நேரங்களில் எங்கிருக்கிறார்கள், அப்படி சிலர் இருக்கிறார்களா எனத் தோன்றும். படம் வெளியானால் போதும், தியேட்டரில் குவிந்துவிடுவார்கள். இத்தனைக்கும் அஜித் பொதுவெளிக்கு வருவதில்லை, ரசிகர்களை சந்திப்பதில்லை, குறைந்தபட்சம் நரைக்கு டைகூட அடிப்பதில்லை. ஆனால், கூட்டம் கும்மியடிக்கும்.

அஜித்தின் வேதாளம், கமலின் தூங்கா வனம் ஒன்றாக வெளியான போது வேதாளம் முதலிடம் பிடித்தது. இப்போது விஸ்வாசம் ரஜினியின் பேட்ட. இதிலும் தமிழக அளவில் அஜித்தின் விஸ்வாசமே முதலிடம் பிடித்துள்ளது.

விஸ்வாசம் தமிழகத்தில் முதல்நாளில் 26 கோடிகளை வசூலித்துள்ளது. விஸ்வாசம் சன் பிக்சர்ஸின் பேட்ட என்ற பிரமாண்ட போட்டியுடன் வெளியாகி 26 கோடிகளை வசூலித்துள்ளது. இது அசாதாரணமான வசூல்.

தொடர்ந்து விடுமுறை தினங்கள் வருவதால் பேட்ட, விஸ்வாசம் இரண்டும் மிகப்பெரிய வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் விஸ்வாசம், வீரம், வேதாளத்தை தாண்டிய வெற்றி பெறும் என கணித்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here