ஓடாத படத்துக்கு சக்சஸ் மீட் – 6 அத்தியாயம் காமெடி

0
473

படம் வெற்றியா தோல்வியா என்பதை துல்லியமாக கணிக்க முடியாத நிலையில் படம் சம்பந்தப்பட்டவர்கள் சக்சஸ் மீட் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், படம் அட்டர் பிளாப் என அனைவருக்கும் தெரிந்த நிலையில் சக்சஸ் மீட் நடத்த தனி தைரியம் வேண்டும்.

அஜயன் பாலா, கேபிள் சங்கர் உள்பட ஆறு பேர் இயக்கத்தில் சென்ற வாரம் வெளியான படம் 6 அத்தியாயம். ஆறு தனித்தனி ஹாரர் குறும்படங்களின் தொகுப்பு. இப்படியான முயற்சிகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. 6 அத்தியாயத்தில் உள்ள ஒரு வித்தியாசம், ஒன்றன்பின் ஒன்றாக ஆறு படங்களின் கதைகளையும் பாதி சொல்லிவிட்டு, இடைவேளைக்குப் பிறகு மீதி கதையை காட்டுகிறார்கள். எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனிக் கதைகள். அதை ஏன் பாதி பாதியாக காட்ட வேண்டும்?

கதை, மேக்கிங், ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலும் அமெச்சசூர்த்தனம் பளீரிடும் படைப்பு இது. சென்னை பாக்ஸ் ஆபிஸில் டாப் 8 க்குள் இந்தப் படம் இல்லை. சென்னையிலேயே இதுதான் நிலை என்றால் பி மற்றும் சி சென்டர்களில்?

புதிய முயற்சி, அதனால் வரவேற்க வேண்டும், இதேபோல் புது முயற்சிகள் வருவதற்கு இது உந்துதலாக இருக்கும் என்று படத்தை பாராட்டுகிறவர்கள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். கோச்சடையான் படம் வந்த போதும் இப்படித்தான் சொன்னார்கள். படத்தின் தரத்தை பார்க்காதீர்கள், முதல் முயற்சி, இதுபோன்ற புது முயற்சிகளுக்கு பாதை அமைக்கும் என்றார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது?

கோச்சடையான் படத்தால் பெர்பாமன்ஸ் கேப்சர் திரைப்படம் என்றாலே சூடுபட்ட பூனைபோல் தயாரிப்பாளர்கள் ஓடிப்போகிறார்கள். 6 அத்தியாயம் போல் ஒரு முயற்சி என்றால் இனி எந்த தயாரிப்பாளர் பணம் போட முன்வருவார்?

அனைத்து வகையிலும் தோல்வியடைந்தப் படத்துக்கு, மக்கள் பேராதரவு, காட்சிகளை அதிகரித்திருக்கிறார்கள் என்று கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள்.

நியாயமா இயக்குனர்களே?

இதையும் படியுங்கள்: விழுப்புரம்: ’கொலை வெறித் தாக்குதலுக்குள்ளான குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here