மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மேற்கு புறநகர் விலே பார்லே என்னும் பகுதியில் உள்ள பிரபலமான உணவு விடுதியில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த பிரமுகர் சுனில் கஹாதிக் என்பவர், 100 ‘வடபாவ்’ என்ற தின்பண்டத்தை இலவசமாக தருமாறு கேட்டுள்ளார். இதற்கு கடையில் வேலைபார்க்கும் ஊழியர் தர மறுத்ததற்கு, கையில் தடியுடன் சென்று அவரை தாக்கினார்.

இந்தச் சம்பவம், கடைக்குள் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. மேலும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதித்து, அவரை கைது செய்தனர். இதனைதொடர்ந்து சுனில் மஹாதிக்கை கட்சியை விட்டு சிவசேனா நீக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்