ஓகி புயலினால் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குடும்பத்தினர் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த நவ.30ஆம் தேதியன்று தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறியது இந்த ஒகி புயலினால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் கடுமையான சேதம் ஏற்பட்டது. அதேபோன்று ஓகி புயலினால் கேரள மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 1,100க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகினர். காணாமல்போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி மீனவ குடும்பத்தினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி, தூத்தூர், சின்னத்துறை உள்ளிட்ட எட்டு கிராமங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்டவர்கள் குழித்துறையில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கோஷமிட்டும் வருகின்றனர். போராட்டம் நடத்தி வருபவர்கள் தங்கள் கைகளில் கருப்புக் கொடி ஏந்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஃபேஸ்புக்குக்கு அடிமையானவரா நீங்கள் ? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்