ஒ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் சிகிச்சைக்காக ராணுவ விமானத்தை அனுப்பியது தவறல்ல

0
308

மனிதாபிமான அடிப்படையில் துணை முதல்வரின் சகோதரருக்கு சிகிச்சைக்காக ராணுவ விமானத்தை அனுப்பியிருந்தால் வரவேற்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் கூறினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரின் சிகிச்சைக்காக ராணுவ விமானம் அனுப்பியிருந்தால் அதில் தவறில்லை. விபத்தில் சிக்கிய ஒருவரை அந்த வழியாகச் சென்ற அமைச்சர் மீட்டு தனது காரில் அழைத்துச் சென்றால் நல்ல விசயம் தானே.

அப்படி இருக்கையில், சிகிச்சைக்காக ராணுவ விமானத்தை அனுப்புவதும் வரவேற்கத்தக்க செயல்தான். ஆகவே துணை முதல்வரின் சகோதரரின் சிகிச்சைக்கு ராணுவ விமானத்தை அனுப்பியதை விமர்சிப்பவர்கள் விதி மீறல் வேறு, முறைகேடு வேறு என்பதை அறிந்திருக்கவேண்டும் .

பொதுமக்கள் ஆளுநரிடம் மனு அளிப்பதை தடுக்கும் வகையில் திமுக போராட்டம் நடத்துவது சரியல்ல.

அதிமுக அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆகவே அதை கலைக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை. தேர்தலில் நிச்சயம் கூட்டணி அமைத்தே பாஜக போட்டியிடும். வரும் 2019 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் தொடர்பான கட்சிப் பணிகளை கன்னியாகுமரி, மதுரை மக்களவைத் தொகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here