ஊரக பகுதிகளில் 2011-12 லிருந்து 2017-18 இடையிலான காலகட்டத்தில் சுமார் 4.3 கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மேலும் வேலைவாய்ப்பின்மை வீதம் 2011-2012 இல் 2.2 சதவீதமாக இருந்தது. தற்போது 6.1 சதவீதாக அதிகரித்துள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தினமும் இந்தியாவில் 450 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது என்று நினைத்தேன். ஆனால் மோடியின் திட்டங்கள் 2018 இல் 1 கோடி பேரின் வேலையை பறித்திருக்கிறது . அதாவது தினமும் 27000 பேர் வேலை இழந்துள்ளனர் . இந்தியாவின் பிரதமர் மோடி ஒரு ஜோக் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் தொழிலாளர்கள் நிலை குறித்த ஆய்வு ஒன்றை இந்திய அரசு வெளியிடாமல் புதைத்துவிட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஆய்வு முடிக்கப்பட்டு இந்திய அரசால் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையத்தின், குறிப்பிட இடைவெளிகளில் எடுக்கப்படும் தொழிலாளர்கள் நிலை குறித்த தரவுகள் குறித்து ஆராய்ந்துள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். இந்தியாவில் ஆண் தொழிலாளர்கள் எண்ணிக்கை சுருங்கியுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

நகர பகுதிகளில் 2017-18 தரவுகளின்படி இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற்ற ஆண்களின் எண்ணிக்கை 28.6 கோடி மட்டுமே. இது 2011 -2012-இல் 30.4 கோடியாக இருந்திருக்கிறது.

1993-94க்கு பிறகு அதாவது கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற்ற ஆண்கள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here