சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கும் சிறப்பினமாக ரூ.2500 மதிப்பூதியம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்புப் பணியில் தன்னலம் கருதாமல், அயராது களப்பணி ஆற்றிவரும் சுமார் 33,000 நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் சேவையை நான் மனதார பாராட்டுகிறேன்.

அவர்களின் இந்த அரிய சேவையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கும் சிறப்பினமாக 2,500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்.

மேலும் சென்னை மாநகராட்சி பகுதியில் நோய் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுவர். சென்னை மாநகராட்சியில் மட்டும் அவர்கள் முகாமில் இருந்து வீடு திரும்பும் போது தலா ஆயிரம் ரூபாய் ரொக்க நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here