(பிப்-25) இன்று சிலிண்டரின் விலை மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. இதனால் சிலிண்டரின் விலை தற்போது ரூ.810 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி சிலிண்டரின் விலை ரூ.710 ஆக இருந்தது. இந்நிலையில், இந்த மாதம் (பிப்ரவரி ) 4-ம் தேதி ரூ.25 ரூபாய் அதிகரித்து ரூ.735 ஆக விற்பனை செய்யப்பட்டது. பின் பிப்ரவரி 15-ல் மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.785 -க்கு விற்பனையானது.

இதனையடுத்து, இன்று சிலிண்டரின் விலை மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. இதனால் சிலிண்டரின் விலை தற்போது ரூ.810 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரே மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.100 அதிகரித்துள்ளது. சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருவது, பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here