இந்திய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை (இன்று) ஏற்பட்ட கடும் வீழ்ச்சி காரணமாக ஒரு லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 409.73 புள்ளிகள் சரிந்து 32,596.54 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 116.70 புள்ளிகள் சரிந்து 9,998.05 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவுபெற்றது. கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டுள்ளன.

இன்றைய வர்த்தகத்தில் ஐடி மற்றும் மீடியா துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வைக் கண்டன. ஆட்டோமொபைல், வங்கி, எஃப்.எம்.சி.ஜி, மெட்டல், ரியல் எஸ்டேட் என அனைத்துத் துறையைச் சார்ந்த நிறுவனங்களின் பங்குகளும் சரிவையே கண்டன. இதனால் முதலீட்டாளர்களுக்கு 1,57,268.38 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.00ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்