சென்னை மெட்ரோ ரயில் கடந்த 10-ம் தேதியில் இருந்து இலவச பயணம் நடைமுறையில் இருந்து வருகிறது. 4-வது நாளான இன்றும் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் மட்டும் 2,10,792 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் கடந்த 10-ம் தேதியில் இருந்து இலவச பயணம் நடைமுறையில் இருந்து வருகிறது. 4-வது நாளான இன்றும் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சென்னையில் டி.எம்.எஸ். – வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் கடந்த 10-ம்தேதி முதல் சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து மக்கள் மத்தியில் மெட்ரோ ரயில் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அன்றும், அதற்கு மறுநாளான 11-ம்தேதியும் பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. 

இதனால் மக்கள் அதிக எண்ணிக்கையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த தொடங்கினர். சில வழித்தடங்களில் நிற்க இடமின்றி கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று 3-வதுநாளாக இலவச சேவை நீட்டிக்கப்பட்டது. 

இந்த 3 நாட்களில் கிடைத்த வரவேற்பை பார்த்த மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று 4-வது நாளும் இலவச ரயில் சேவையை நீட்டித்துள்ளது. இதையடுத்து, மக்கள் கூட்டம் கூட்டமாக மெட்ரோவில்

இந்தநிலையில் நேற்று மட்டும் மெட்ரோவில் 2,10,792 பேர் பயணம் செய்துள்ளனர். ஒரே நாளில் மெட்ரோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை இதுவே அதிகம். இதைத் தவிர்த்து கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 4,12,348 பேர் மெட்ரோ ரயிலின் இலவச சேவையை பயன்படுத்தியுள்ளனர். 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here