மக்களவைத் தேர்தலுடன் , மாநில சட்டப் பேரவை தேர்தல்களும் ஒரே நேரத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இயலாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமெனில் சட்ட நடைமுறையை வகுப்பது அவசியமானது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை முன்கூட்டியே முடித்து வைப்பது அல்லது பதவி நீட்டிப்பு வழங்குவது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளாமல், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த வேண்டும் என்று பாஜக தலைவர் அமித் ஷா, சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த, பிரதமர் நரேந்திர மோடியும் முழு ஆதரவை அளித்து வந்தார்.

இதுதொடர்பாக, பிற அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் மத்திய சட்ட ஆணையம் கேட்டறிந்து வருகிறது.

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், செய்தியாளர்களை சந்தித்தபோது, ஒரே தேர்தல் திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்

மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தை முடித்து வைக்கவோ அல்லது நீட்டிக்கச் செய்யவோ வேண்டுமெனில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை 100 சதவீதம் கொள்முதல் செய்வது போன்ற ஏற்பாடுகளை மேற்கொள்வது இத்திட்டத்துக்கு தடங்கலாக இருக்கும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளை 2015-ஆம் ஆண்டிலேயே தெரிவித்து விட்டோம். கூடுதல் பாதுகாப்பு படையினர், கூடுதல் தேர்தல் அலுவலர்கள் போன்ற தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது’’ என்று கூறினார்.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் , ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன. செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 13.95 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களும், 9.3 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் முடிவடையும். 16.15 லட்சம் வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் கொள்முதல் செய்யும் நடவடிக்கை நவம்பர் மாத இறுதியியில் முடிவடையும் என்றும் கூறினார்.

ஒரே நேரத்தில் தேர்தல் திட்டத்தை அமல்படுத்த மொத்தம் 24 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும்.

ஆகவே, கூடுதலாக 12 லட்சம் வாக்குப்பதிவு மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை வாங்குவதற்கு ரூ.4,500 கோடி செலவாகும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது .

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here