ஒரேயொரு வாட்ஸ்ஆப் வதந்தியால் இந்தியாவில் 29 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகளை அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை . அரசாங்கம் விழிக்கும் முன் இன்னும் எத்தனை பேர் அநியாயமாகக் கொல்லப்படுவர்?

சென்ற மே மாதம் முதல் இந்தியாவில் ஒரேயொரு வாட்ஸ்ஆப் வதந்தியால் 29 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை. இக்கொலைகளில் அரசியல் தொடர்பு எதுவும் கிடையாது. ஹிந்து-முஸ்லீம்
விவகாரமோ ஜாதிப் பிரச்சனையோ கிடையாது. இந்தியா-பாகிஸ்தான், பாஜக- காங்கிரஸ், ஜிஹாத், நக்ஸலைட், ஆர்.எஸ்.எஸ்., காஷ்மீர், அரசியல்வாதிகளின் கருத்துகள், அதற்கு பதில் கருத்துகள் என்று எந்த காரணமும் கிடையாது.

இது ஒரு கவர்ச்சியான கதையல்ல. தேசிய அளவில் இந்த பிரச்சனை வெடிக்கும் முன் இன்னும் எத்தனை பேர் அநியாயக்கொலைக்கு இரையாவார்கள்? இதே போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்த எண்ணிக்கை 100 பேரை தொட்டுவிடும் என்று கணிக்கப்படுகிறது.

குழந்தை கடத்தல் கும்பலை பற்றிய வதந்தி தான் அது. அவர்கள் வந்து, உங்கள் குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.

தமிழ்நாடு முதல் திரிபுரா வரை இந்த வதந்தி காட்டுத்தீயைப் போல் நாடு முழுவதும் பரவியுள்ளது. இணையதளத்தை
முதன்முறையாக பயன்படுத்துவோரின் கைகளில் கிடைத்திருக்கும் வாட்ஸ்ஆப் செயலி தான் இதற்கெல்லாம் காரணம். விலை மலிவான ஸ்மார்ட்ஃபோன்களும் இணைய சேவைகளும் பலகோடி இந்தியர்களை போலியான செய்திகள் நிறைந்த உலகிற்கு
முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான குழந்தை கடத்தல்காரர்கள் நமது மாநிலத்திற்குள்
நுழைந்துள்ளனர், என்று அக்குறுஞ்செய்திகள் வழக்கமாக எச்சரிக்கும்.

வெளியாட்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள், அவர்கள் குழந்தை கடத்துபவர்களாக இருக்கலாம், உடலுறுப்புகளை விற்பவர்களாக இருக்கலாம், என்று போய்க்கொண்டே இருக்கும். இக்குறுஞ்செய்திகள் வழக்கமாக ஒரு காணொளியுடன் வரும். இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் குழந்தையை கடத்தப்படுவது போல், சிசிடிவியால் பதிவுசெய்யப்பட்டது போல் உள்ள
காணொளி தான் அது. இக்காணொளி பாகிஸ்தானின் கராச்சி நகரில் குழந்தை கடத்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டதாகும். இந்தியாவில் பரவும் அக்காணொளியில் கடைசி பகுதி மட்டும் திருத்தப்பட்டிருக்கும்.

இதற்கான உடனடி தீர்வு ஒன்று தான். இதற்கு எதிரான ஒரு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் இதுகுறித்த தகவல் சென்று சேரவேண்டும். திரிபுரா அரசாங்கம் இது போன்ற வதந்திகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிப்பாளர் ஒருவரை நியமித்துள்ளனர். ஆனால் அந்த அறிவிப்பாளரே அடித்து கொலை செய்யபட்டுள்ளார். எந்த
அளவுக்கு இதற்கு எதிரான பிரச்சாரம் செய்யப்படவேண்டும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். மாநில அரசாங்கங்களும் உள்ளூர் காவல்துறையினரும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது போதாது.

வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது என பிரதமர் பேசினால் அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் அவரிடம் அப்படி செய்யவேண்டி யாரும் சொல்லவில்லை. எந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டாலும், பிரதமர் ஏன் இதுகுறித்து வாய் திறக்கவில்லை என்று வாரக்கணக்கில் விவாதிக்கப்பட்ட பிறகு தான் நரேந்திர மோடி வாய் திறப்பார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இருந்தும் எந்த வார்த்தையும் வரவில்லை. மாநிலங்களுக்கு எதாவது அறிவுறுத்தப்பட்டிருக்கிறதா? அதுவும் நமக்கு தெரியாது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் என்ன செய்துகொண்டிருக்கிறார்? கேம்பிரிட்ஜ் தகவல் திருட்டு விவகாரத்தில், மார்க் சுக்கர்பர்க் இந்தியாவிற்கு கொண்டுவர சம்மன்
அனுப்பப்படும் என உடனே எச்சரித்தார். 31 பேரை பலிகொண்ட விவகாரம் ஒன்று இங்கே உள்ளதே, இதுகுறித்து ரவி ஷங்கர் பிரசாத் ஏதாவது பேசினாரா? இதற்கும் மார்க் சுக்கர்பர்க்கிற்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளாரா?

உலகளவில் வாட்ஸ்ஆப்பின் மிகப்பெரிய சந்தை இந்தியா தான். ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த செயலிக்கு இந்தியாவில் ஒரு செய்தித்தொடர்பாளர் கூட கிடையாது. ஆனால், தொழில் கணக்குகள் மட்டும் துவங்கிவிட்டனர். இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என இந்தியாவிலுள்ள அனைத்து வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களுக்கும் ஒரு குறுஞ்செய்தி அனுப்புவது அவர்களுக்கென்ன அவ்வளவு கஷ்டமா? அமெரிக்காவில் வசதியாக அமர்ந்து கொண்டு வாட்ஸ்ஆப்பில் மக்கள் செய்வதற்கெல்லாம் நாங்கள் பொறுப்பல்ல என்று சொல்கிறார்கள். இது சரியல்ல.

அநியாயக்கொலைகளின் பட்டியல் இதோ:
2017
மே: ஜார்கண்டில் 7 பேர் அடித்து கொலை.
2018ல் இதுவரை
10 மே: தமிழ்நாட்டில் இருவர் கொலை.
23 மே: பெங்களூரில் ஒருவர் கொலை.
மே 2018: ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் நடைபெற்ற
வெவ்வேறு சம்பவங்களில் 6 பேர் கொலை.
8 ஜூன்: மஹாராஷ்ட்ராவின் ஔரங்காபாதில் 2 பேர் கொலை.
13 ஜூன்: மேற்கு வங்கத்தின் மால்டாவில் ஒருவர் கொலை.
23 ஜூன்: மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூரில் ஒருவர் கொலை.
26 ஜூன்: குஜராத்தின் அகமதாபாதில் 45 வயது பிச்சைக்காரப் பெண் கொலை.
28 ஜூன்: திரிபுராவில் வதந்திகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த
அரசாங்கம் நியமித்த அறிவிப்பாளர் உட்பட ஒரே நாளில் 3 பேர் கொலை.
1 ஜூலை: மஹாராஷ்ட்ராவின் தூளே மாவட்டத்தில் 5 பேர் கொலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here