ரஃபேல் வருகைக்காக இந்திய விமானப்படைக்கு ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஒரு ரஃபேல் விமானத்தின் விலை ரூ.525 கோடிக்கு பதிலாக ரூ.1,670 கோடிக்கு வாங்குவது ஏன்? மொத்தம் 126 விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்கள் வாங்குவது ஏன்? ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலாக திவாலான அனில் அம்பானிக்கு, ரூ.30,000 கோடி ஒப்பந்தம் கொடுத்தது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.