ஒரு பெண் வீட்டின் முன் சிறுநீர் கழித்து அவரிடம் ஆபாசமாக அருவெறுப்பாக நடந்துகொண்ட சுப்பையா சண்முகத்தை எய்ம்ஸ் உறுப்பினராக்கும் மோடி அரசு

0
300

பெண்ணைத் துன்புறுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட மருத்துவர் சுப்பையா சண்முகம், மதுரை எய்ம்ஸ் வாரிய உறுப்பினராக நியமித்திருப்பதற்கு தமிழக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவனையின் தலைவர் மற்றும் வாரிய உறுப்பினர்களை இந்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் உள்ள ஜிப்மெர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.எம். கடோச், மதுரை எய்ம்ஸின் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் வாரிய உறுப்பினர்களாக டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், இந்திய அரசின் சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநர், இந்திய சுகாதார துறையின் கூடுதல் செயலர், சுகாதாரத் துறையின் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலர், இந்திய அறிவியல் காங்கிரஸ் தலைவர் டாக்டர் விஜயலட்சுமி சக்ஸேனா, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் தலைவர் டாக்டர் காமேஸ்வர் பிரசாத், ஜோத்பூர் எய்ம்சின் சமூக மருத்துவப் பிரிவின் தலைவர் பங்கஜ ராகவ், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸின் இருதயவியல் பிரிவு பேராசிரியர் வனஜாக்சம்மா, ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சைத் துறையின் பேராசிரியர் பிரசாந்த் லவனியா, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் புற்றுநோய் அறுவை சிகிச்சையியல் துறையின் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சுப்பையா சண்முகம், மதுரை எய்ம்ஸின் வாரியக் குழுவில் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக தி.மு.க மக்களவை குழு துணைத் தலைவர் கனிமொழி, “இது அநாகரிகமான செயலை ஏற்கும் நடவடிக்கையா அல்லது பா.ஜ.க. தொண்டர்கள் இதுபோல நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான ஊக்க நடவடிக்கையா?” என்று கேட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், இது பெண்மையை இழிவுபடுத்தியதற்காகக் கொடுக்கப்படும் பரிசா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது, அவர் RSS உறுப்பினர் என்பதற்காகவா அல்லது பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா ? இது தான் மநு சாஸ்திரத்தின் வழி ஆட்சியோ ?” என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கரூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி, ஒரு பெண் வீட்டின் முன் சிறுநீர் கழித்து,அவரிடம் ஆபாசமாக அறுவெறுப்பாக நடந்துகொண்ட பிஜேபியின் சண்முக சுப்பையாவை,மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவகல்லூரி உறுப்பினராக நியமித்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. பெண்களை,மருத்துவத்துறை இதை விடவும் யாரும் இழிவு படுத்திவிடமுடியாது என்று தனது ட்விட்டர் பக்ககத்தில் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், “பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டில் வழக்கு பதியப்பட்டவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமனம்: இது பெண்களை அவமதிப்பதில்லையா?” என்று கேட்டிருக்கிறார்.

மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனும் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். “தோப்பூரில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக ABVP அமைப்பைச் சேர்ந்த சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் செய்த இழிவு செயலுக்காக கொடுக்கப்படும் பரிசா?” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தனது பக்கத்து வீட்டில் குடியிருந்த 62 வயது பெண்மணியை துன்புறுத்தியதாக சுப்பையா சண்முகம் மீது புகார் எழுந்தது. காலியாக இருந்த பார்க்கிங் இட பிரச்சனை தொடர்பாக அந்த பெண்மணியின் வீட்டின் முன்பாக சுப்பையா குப்பைகளைக் கொட்டும் காட்சிகளும் சிறுநீர் கழிக்கும் சிசிவிடி காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாயின. ஆனால், இந்த காணொளி பொய்யானது என்று கூறிய சுப்பையா சண்முகம் தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டபோதும், சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண்மணி புகாரைத் திரும்பப்பெற்றுக்கொண்டார்.

 https://www.bbc.com/

Presentational grey line

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here