ஒரு நாளைக்கு எத்தனை சப்பாத்தி சாப்பிடலாம்?: உடல் எடையைக் குறைக்க விரும்புவர்களுக்கான டிப்ஸ்

0
453

உடல் எடையைக் குறைப்பவர்களின் முதல் எதிரி கொழுப்புதான். அதேசமயம் கார்போஹைட்ரேட்டும் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். ஆனால் கார்போஹைட்ரேட்டும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளில் ஒன்று. அதை சரியான அளவில் உட்கொள்வதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.

உடல் எடை குறைக்க விரும்புவோர் எளிதில் சப்பாத்தி உணவிற்கு மாறி விடுவார்கள். இதனால் கலோரி குறைவாக கிடைக்கும். ஆனால் இதுவும் கார்போஹைட்ரேட் கொண்டது. எனவே எத்தனை சாப்பிட்டால் அளவாக இருக்கும் என்பதில் பலருக்கும் குழப்பம் உண்டு.

சப்பாத்தி கார்போஹைட்ரேட் மட்டுமன்றி உடலுக்குத் தேவையான புரோட்டீன், நல்ல கொழுப்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. கார்போஹைட்டேர், புரதம் ஆகியவை நுண்ணிய ஊட்டச்சத்துக்கள். எனவே அவற்றை அதிக அளவில் உட்கொண்டால்தான் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.

எனவே சிறிய 6 இஞ்ச் சப்பாத்தி எனில் அதில் 71 கலோரிகள் உள்ளன. நீங்கள் சாப்பிடும் மதிய உணவில் 300 கலோரிகள் உள்ளது எனில் 2 சப்பாத்திகள்உட்கொள்ளலாம். அதில் 140 கலோரிகள் கிடைக்கும். மீதம் காய்கறி பழங்களாக உட்கொள்ளலாம். காய்கறி மற்றும் பழங்களிலும் கார்போஹைட்ரேட் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கோதுமை சப்பாத்தி என்றில்லாமல் திணை வகை, பார்லி மாவுகளிலும் சப்பாத்தி செய்து சாப்பிடலாம். நீங்கள் சப்பாத்தி சாப்பிடுவதால் மட்டும் உடல் எடை குறையாது. அதற்கு ஏற்ப உடற்பயிற்சி, போதுமான உறக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அவசியம் என்பதை நினைவில் கொள்க.

குறிப்பு: எந்த உணவு பழக்கத்தைப் பின்பற்றினாலும், டயட் மேற்கொள்ள முயற்சித்தாலும் மருத்துவரின் ஆலோசனையின்றி செய்வதை தவிர்க்கலாம். ஊட்டச்சத்து நிபுணர்களை கலந்து ஆலோசித்து உங்கள் உடலுக்கேற்ற டயட்டை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here