சாகித்ய அகாடமி 2016ஆம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழக எழுத்தாளர் வண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரின் ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்படவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை வண்ணதாசனின் இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம். கல்யாண்ஜி என்ற புனைபெயரில் கவிதைகளும், வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும் எழுதி வருகிறார். 1962ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.

வண்ணதாசனின் படைப்புகளில் சில :

கனிவு
நடுகை
சமவெளி
உயரப் பறத்தல்
மனுஷா மனுஷா
ஒளியிலே தெரிவது
கிருஷ்ணன் வைத்த வீடு
பெயர் தெரியாமல் ஒரு பறவை
கலைக்க முடியாத ஒப்பனைகள்
தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்