சில வாரங்களுக்கு முன்பு மத்தியப்பிரதேசம் மாநிலம் ஷியோப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் சிலருக்கு வழங்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டில் காந்தி படம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அங்குள்ள கார்கோன் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம்.களில் ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்கள் வருவதாக புகார் தெரிவித்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

ஹேமந்த் சோனி என்பவர் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் அங்குள்ள ஒரு எஸ்பிஐ ஏடிஎம் ஒன்றில் 1500 ரூபாய் எடுத்துள்ளார். அதில் இரண்டு தாள்களில் ஒரு பக்கத்தில் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தது. மாகாத்மா காந்தியின் படம் இருந்த பக்கம் மட்டுமே அச்சிடப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.

இதுகுறித்து உடனடியாக அருகில் இருந்த வங்கியில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து எஸ்பிஐ வங்கி, தவறாக அச்சிடப்பட்ட தாள்களை பெற்று கொண்டு அவருக்கு சரியான தாள்களை வழங்கியது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ”புதிய 2000 ரூபாய் நோட்டில் காந்தி இல்லை” : மீண்டும் பிரிண்டிங் மிஸ்டேக்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்