“ஒருத்தனாவது சாவணும்” துப்பாக்கிச் சூட்டின்போது போலீஸ் பேசிய வீடியோ

0
1395

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாள் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டு
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று (செவ்வாய்கிழமை) ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தின் போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு வீடியோ ஒன்றூ வெளியானது அந்த வீடியோவில் ஒரு போலீஸ்
“ஒருத்தனாவது சாவணும்” என்று பேசுகிறார்.

நேற்று (செவ்வாய்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூட்டினைத் தொடர்ந்து அம்மாவட்டத்தில் 25-ஆம் தேதி வரை 144 தடையை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்