பொதுத்துறை நிறுவனமான பவான் ஹான்ஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் சங்கம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பி.எப். பலன் கிடைக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு. லலித் மற்றும் இந்து மல்கோத்ரா அடங்கி அமர்வு அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு. லலித் மற்றும் இந்து மல்கோத்ரா பிறப்பித்த உத்தரவில், இ.பி.எப். சட்டம் பிரிவு 2(f)ன்படி, ஒரு பணியாளரின் வரையறை என்பது ஒரு உள்ளடக்கிய வரையறையாகும். மேலும் எந்தவொரு நபரும், ஒரு நிறுவனத்தின் பணி தொடர்பாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவதாகவும், ஊதியம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Screen-Shot-2020-01-19-at-5-11-45-PM

இ.பி.எப். மற்றும் இதர விதிமுறைகள் சட்டத்தின்கீழ், சமூக பாதுகாப்பு பலன்களை பெற சாதரண பணியாளர்களும் உரிமை உண்டு. எனவே பவான் ஹான்ஸ் நிறுவனம், பி.எப். திட்டத்தின்படி, அதன் பலன்களை தனது அனைத்து ஒப்பந்த பணியாளர்களுக்கும் 2017 ஜனவரி முதல் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளது. முன்னாள் தொழிலாளர் செயலர் சங்கர் அகர்வால் கூறுகையில், நிரந்தர பணியாளர்கள் மற்றும ஒப்பந்த பணியாளர்களுக்கு இடையே எந்தவித பாகுபாட்டையும் தொழிலாளர் சட்டங்கள் காட்டவில்லை. பி.எப். திட்டத்தின்கீழ் அனைத்து பலன்களையும் பணியாளர்களுக்கு நிறுவனங்கள் கட்டாயம் வழங்கவேண்டும். மற்ற நிறுவனங்கள் வாயிலாக தங்களிடம் பணியாளர்கள் வேலைபார்த்தாலும் அவர்களுக்கும் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here