நாமக்கல்லைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் தற்கொலை வழக்கின் விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் தமிழ் சினிமாவின் நிலை என்னவாகும் ?

ஆகே நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், விஜயபாஸ்கரின் நண்பரான அரசு ஒப்பந்ததாரர் சுப்ரமணியத்தின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.

இதையும் படியுங்கள் : ஒரு லட்சம் ஐடி பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் : என்ன செய்ய முடியும் – ஐடி பணியாளர்கள் மன்றத்தின் தலைவி பரிமளா

இந்நிலையில் சுப்ரமணியன், நாமக்கல் மாவட்டம் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள தனது தோட்டத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், தனக்கும் தொடர்பில்லை என தற்கொலை செய்துகொண்ட ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் எழுதிய கடிதத்தை அவரது குடும்பத்தினர் வெளியிட்டிருந்தனர். மேலும் அதில், தனது வீட்டில் வருமானவரிச் சோதனை நடைபெறுவதற்கு ஒப்பந்ததாரர் தென்னரசுதான் காரணம் என்றும், தொழில் போட்டி காரணமாக தனக்கும், விஜயபாஸ்கருக்கும் தொடர்பு உள்ளதாக வதந்தி பரப்பியதாகவும் அவர் கடிதத்தில் எழுதியுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இதையும் படியுங்கள் : பயன்படுத்திக் கொள்ளுங்கள்: சவுதியில் பிஎஸ்சி/டிப்ளோமா படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

இந்நிலையில், இந்தத் தற்கொலை வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்