”ஒபாமா கடந்த முறை ஹிலாரியை விட கடினமாக பிரச்சாரம் செய்தார். ஆனால் வெற்றி பெற்றது நான் தான்”: அதிபர் டிரம்ப்

0
75

அமெரிக்க அதிபர் தேர்தலில் தமக்கு எதிரான பராக் ஒபாமாவின் பிரசாரத்திற்கு அஞ்சப்போவதில்லை என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்பும், துணை அதிபராக மைக் பென்ஸும் போட்டியிடுகின்றனர்.

இவர்களுக்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் ஜோபிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் அதிபர்ஒபாமா தெரிவித்துள்ளார். பென்சில்வேனியாவில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் ஜோபிடனுக்காக அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர் மற்றொரு வேட்பாளருக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், ”எனக்கு எதிரான ஒபாமாவின் பிரசாரத்திற்கு அஞ்சப்போவதில்லை. அவர்கள் சரியான முறையில் தங்களது செயல்களை மேற்கொண்டிருந்தால் நான் அதிபராக வென்றிருக்க முடியாது. அவர்கள் கீழ்த்தரமான செயல்களையே செய்து வருகின்றனர். அதனால் தான் நான் அதிபராக உங்கள் முன்பு நிற்கிறேன்” என்று கூறினார்.   

”ஒபாமா கடந்த முறை ஹிலாரியை விட கடினமாக பிரச்சாரம் செய்தார். ஆனால் வெற்றி பெற்றது நான்தான். அதனால் ஒபாமாவின் தற்போதைய பிரசாரத்திற்கு கவலைப்படப் போவதில்லை” என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here