ஒன்றாக இணைந்து நாம் வளர்வோம் – பிரதமர் மோடி

0
318

மக்களவைத் தேர்தலில் பாஜக முன்னிலை பெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி இந்தியா மீண்டும் வென்றுள்ளது எனக் கூறியுள்ளார்.  

பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாஜகவை பொறுத்தவரையில் தனியாகவே தற்போது 301 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கூட்டணியுடன் சேர்ந்து 347 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒன்றாக இணைந்து நாம்  வளர்வோம். ஒன்றாக சேர்ந்து வளர்ச்சியை எட்டுவோம். அனைவரையும் ஒன்றாக இணைந்து வழி நடத்தி மிக வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வென்றுள்ளது என பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here