ஒன்பிளஸ் 8டி 5ஜி டீசர் வெளியானது

HIGHLIGHTS .OnePlus 8T has been teased ahead of India launch. .The phone has been listed on Amazon India's website. .OnePlus 8T is expected to be launched on October 14.

0
121

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களான ஒன்ப்ளஸ் 8டி மாடல்களை வெளியிட தயாராகி வருகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 8டி 5ஜி ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் இது ஆகும்.

Ei-P-0q6-U4-AUN-ym

புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் வீடியோவில், பிரபல ஹாலிவுட் நடிகரும் ஒன்பிளஸ் விளம்பர தூதருமான ராபர்ட் டவுனி ஜூனியர் தோன்றுகிறார்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 8டி மாடலில் பிளாட் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதில் 6.55 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இத்துடன் ஒன்பிளஸ் 8டி மாடலில் குவாட் கேமரா செட்டப், 48 எம்பி பிரைமரி லென்ஸ், 16 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது.

முன்னதாக வெளியான ஒரு தகவலின் படி வரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் 8டி மாடலில் 65W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Eiar-Jt-RUMAAc9-Pk

புதிய ஒன்பிளஸ் 8டி சீரிஸ் அக்டோபர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் ஒன்பிளஸ் 8டி வெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம். மேலும் முந்தைய மாடல்களை போன்றே புதிய ஒன்பிளஸ் 8டி சீரிஸ் மாடல்களும் அமேசான் வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

புதிய ஸ்மார்ட்போன்கள் அமேசான் மட்டுமின்றி ஒன்பிளஸ் வலைதளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here