ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

இந்நிலையில், அமேசான் வழங்கும் ‘ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட்’ எனும் சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பேஸ் மாடல் ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் 6டி 6 ஜி.பி. ரேம், 128 ஜிபி. மெமரி மாடல் ரூ.29,999 விலையிலும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ.31,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 6டி மாடல் மிரர் பிளாக் மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் ஆரம்பித்திருக்கிறது. ஒன்பிளஸ் 7 பேஸ் மாடல் விலை ரூ.32,999 என  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6டி சிறப்பம்சங்கள் :

– 6.41 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே

– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6

– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm பிராசஸர்

– அட்ரினோ 630 GPU

– 6 ஜி.பி ரேம், 128 ஜி.பி மெமரி  / 8 ஜி.பி ரேம், 256 ஜி.பி மெமரி

– ஆன்ட்ராய்டு 9.0 பை, ஆக்சிஜன் ஒ.எஸ். 9.0

– 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார்

– 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K    சென்சார், F/1.7 அப்ரேச்சர்

– 16 எம்.பி. சோனி IMX371 செல்ஃபி கேமரா

– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

– டூயல் சிம் ஸ்லாட்

– வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி

– யு.எஸ்.பி. டைப்-சி

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

– 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here