ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனில் 10 ஜி.பி. ரேம், 30 வாட் ராப் சார்ஜ் 30 வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் மற்றும் சார்ஜர் என இரண்டிலும் அந்நிறுவனம் இன்டகிரேட்டெட் சர்கியூட்களை வழங்கி இருக்கிறது.

புதிய ராப் சார்ஜ் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை 20 நிமிடங்களில் ஒரு நாள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் 50% வரை சார்ஜ் செய்துவிடும்.

மெக்லாரென் எடிஷன் என்பதால் ஸ்மார்ட்போனை சுற்றி ஆரஞ்சு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் மெக்லாரெனின் கார்பன் ஃபைபர் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனுடன் இருநிறுவனங்களின் வரலாற்றை கொண்டாடும் சிறிய புத்தகம் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஆரஞ்சு நிற கார்டு கேபிள், மெக்லாரென் லோகோ, ஸ்பீட் மார்க் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. மெக்லாரெனின் பிரத்யேக ஸ்டைல் மற்றும் வரலாற்றை பரைசாற்றும் வகையில் பிரத்யேக மென்பொருள் அனிமேஷன்கள் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் விலை ரூ.50,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்று (டிசம்பர் 13) முதல் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா ஸ்டோரில் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here