ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளி பாய்ச்ச பாடுபட்ட மார்டின் லூதர் கிங் பிறந்த நாளன்று இது நிகழ்ந்துள்ளது: கமல்ஹாசன் டிவீட்

0
138

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மக்கள்நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னம்ஒதக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பதிவில், மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளி பாய்ச்ச பாடுபட்ட மார்டின் லூதர் கிங் பிறந்த நாளன்று இது நிகழ்ந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக புதுச்சேரியில் மட்டும் மக்கள் நீதி மய்யத்திற்கு ‘டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழகம்முழுவதும் தங்கள் கட்சிக்கு ‘டார்ச்லைட்’ சின்னத்தை ஒதுக்கக்கோரிமக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here