ஒடிசா மாநிலத்தில், தனது மகளின் சடலத்தை, ஸ்ட்ரெச்சரில் தந்தை எடுத்துச் சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உயிரிழந்த சிறுமியின் சடலத்தை, மருத்துவமனையில் உள்ள ஸ்ட்ரெச்சர் மூலம், அவரது தந்தை எடுத்துச் சென்றார். இதனைக் கண்ட, புல்பானி நகர் போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி, சிறுமியின் சடலத்தைக் கொண்டு செல்ல வாகன ஏற்பாடு செய்து கொடுத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கந்தமால் மாவட்ட ஆட்சியர் பிருந்தா உத்தரவிட்டுள்ளார். கடந்த வருடம்,

இதே போன்று கடந்த வருடம் ஒடிசாவில், காசநோயால் இறந்துபோன தனது மனைவி அமங் டேவின் உடலைத் தூக்கிக்கொண்டு, அவரது கணவர் டானா மாஜி நடந்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் காரணமாக அப்போதைய மாவட்ட ஆட்சியராக பிருந்தாவிடம், ஆம்புலன்ஸ் வசதி கேட்கப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் அந்த வசதியைச் செய்து தரவில்லை. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் பிருந்தா கந்தமால் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது கந்தமால் மாவட்டத்தில் இதே போன்ற சர்ச்சையில் மீண்டும் அவர் சிக்கியுள்ளார்.

இதையும் படியுங்கள் : EXCLUSIVE: சாணை பிடிப்பவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்