ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

Support the Cause of Ockhi-affected families

1
7107
ஒக்கியில் கணவரை இழந்த பெண்; இடம்: சின்னத்துறை படம்: அருள் எழிலன்

கணவனை இழப்பது என்பது வெறும் உறவு சார்ந்த துயரம் மட்டுமல்ல; அங்கு மிகப்பெரிய கடமையும் சுமையும் அந்த விதவையின் தோள் மீது சுமத்தப்படுகிறது. இந்த வேளையில் உளநல நெருக்கடியிலிருந்து பெண்கள் விடுபடுவதற்கான உளநல ஆதரவு தேவை.
ஒக்கி பேரிடர் அபலைகளைப் பற்றி பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின்

ஒக்கி புயல் பேரிடர் என்பது கண்ணுக்குப் புலப்படாத ஒரு சமூகத்துக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர் என்று பேராசிரியரும் எழுத்தாளருமான வறீதையா கான்ஸ்தந்தின் விவரிக்கிறார். கணவனை, அப்பாவை, அண்ணனை, தம்பியை இழந்துபோன ஒக்கி சொந்தங்களுக்காக கன்னியாகுமரியின் கடலோரக் கிராமங்களில் பயணிக்கிறது இப்போது; பெண்கள் அமைப்பான மனிதியும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளது.

உளநல ஆலோசகர் முனைவர் வாசுகி மதிவாணனின் தலைமையில் சகுந்தலா, ஆனந்தி கார்த்திக், சவும்யா சங்கர் ராமன், நளினா விஸ்வநாதன், சாந்தி ராவ், ஸ்வப்னா நாயர், கோமளா விநாயகம், டி.குமரேசன், திவ்யா பிரபா, ராஜன் ஆகிய பத்து உளநல ஆலோசகர்கள் ஒக்கியால் பாதிக்கப்பட்ட கடலோரக் கிராமத்துக் குடும்பங்களை நேரில் சந்தித்து உரையாடி வருகிறார்கள்; நீண்ட கால பந்தங்களை இந்தச் சந்திப்பு உருவாக்குகிறது.

இந்த முயற்சியின் வழிகாட்டி பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின்; இதன் ஒருங்கிணைப்பாளர் சமூக ஆர்வலர் லோபிதாஸ்.

இந்தப் பயணத்தில் இணைய விரும்புவோர் இப்போதை வாட்ஸப்பில் +919884360505, அல்லது செல்பேசியில் +919445515340 தொடர்பு கொள்ளுங்கள். இந்த ஏற்பாட்டுக்கு நிதியளிக்க விரும்புகிறவர்கள், கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் நிதி வழங்கலாம்:

Organisation For Development Action,
Savings Bank Account Number: 613401164134
Bank Address: ICICI Bank, Thillai Nagar Branch, Trichy – 620 018
RTGS/NEFT IFSC Code: ICIC0006134

For a woman, to lose her husband is not merely loss of a relationship; alongside, a very big burden and responsibility are also being placed on her shoulders. When this happens, in order to free them from the enormous mental stress that they experience, the women need to be given mental health support.

—Prof. Vareethiah Konstantine on the women widowed in the aftermath of the Ockhi cyclone.

The Ockhi cyclone disaster is an invisible disaster on an invisible community, explains writer, professor Vareethiah Konstantine. Ippodhu is reaching out to people who have lost husband, brother or son, along Kanniyakumari’s coastal villages. Women’s group Manithi joins hands with Ippodhu in this effort. Under the leadership of Dr Vasuki Mathivanan, a group of ten psychological counsellors Shakunthalaa, Ananthi Karthic, Soumya Sankara Raman, Nalina Viswanathan, Shanthi Rao, Swapna Nair, Dr Komala Vinayagam, D. Kumaresan, Divya Prabha and Rajan have started meeting the families on the coastal villages who lost their loved ones in the cyclone and are conversing with them. This meeting has resulted in establishing long-term relationships.

This effort is being guided by Prof Konstantine and is being co-ordinated by social worker, Lobithas. Those who wish to contribute to this journey may please contact Ippodhu through Whatsapp (+919884360505) or call on the cell phone (+919445515340). Those who wish to donate to support this cause may use the following bank details:

Organisation For Development Action,
Savings Bank Account Number: 613401164134
Bank Address: ICICI Bank, Thillai Nagar Branch, Trichy – 620 018
RTGS/NEFT IFSC Code: ICIC0006134

#OvercomeOckhi
ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்.
Join Hands to Embrace Ockhi Families.
Thanking our First Travel Partner Parveen Travels for the big support.

Parveen Travels is the first travel partner for the #OvercomeOckhi initiative
Parveen Travels is the first travel partner for the #OvercomeOckhi initiative

1 கருத்து

  1. […] இப்போது டாட் காம் இந்த எண்ணத்தை #OvercomeOckhi என்ற தலைப்பில் முன்வைத்தபோது இந்த முயற்சிக்காக முழுமூச்சாக இணைந்து பணிபுரிந்த மனிதி பெண்கள் அமைப்புக்கும் மனநல ஆலோசகர்களை ஒருங்கிணைத்த வாசுகி மதிவாணனுக்கும் நன்றிகள் பல; இந்த முயற்சியை மூன்று வருடங்களுக்குத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கான வேலைகளை இப்போது டாட் காம் செய்து வருகிறது. இந்த முயற்சியில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு இதைப் படியுங்கள். […]

ஒரு பதிலை விடவும்