ஒகி புயலை ஓகே புயல் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை கூறியதால் சட்டப்பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் தற்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தற்போது நடைபெற்று வந்தது. மூன்றாவது நாளான இன்றையக் (புதன்கிழமை), கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள். இதனிடையே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, ஒகி புயலை ஓகே புயல் என்றும், சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸை ஜேம்ஸ் என்றும் தவறுதலாகக் கூறினார். இதனால் அவையில் கலகலப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்