சென்னை ஐ.ஐ.டி.யில் சைவம் மற்றும் அசைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு என தனி தனி இடம் ஒதுக்கியது தவறுதலாக நடைபெற்றதாகவும், அந்த நடவடிக்கை உடனடியாக திரும்பப்பெறப்பட்டதாகவும், ஐ.ஐ.டி. இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆண்டுதோறும் ஐ.ஐ.டியில் நடைபெறும் சாஸ்த்ரா தொழில்நுட்ப விழா வரும் ஜனவரி 3 முதல் நான்கு நாட்கள் நடைபெறவுள்ளதாகக் கூறினார்.

மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில் ரோபாட்டிக் கண்காட்சி, ட்ரோன் எனப்படும் ஆளில்லாத விமான கண்காட்சி, கருத்தரங்கங்கள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளதாகவும், விழாவுக்கு வரும் மாணவர்கள் ஐ.ஐ.டி யில் உள்ள ஆய்வகங்களையும் பார்வையிடலாம் என்றும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here